Thursday, 26 June 2025

புனித கஃபாவின் கிஸ்வா மாற்றும் நிகழ்வு


ஹி
ஜ்ரி 1447(2025) ஆண்டு புனித கஃபாவின் கிஸ்வா துணி மாற்றும் வைபவம் முஹர்ரம் முதலாம் நாள் நேற்று இரவு நடைபெற்றது.

 11 மாதங்கள் நீண்ட நுட்பமான பணிக்குப் பிறகு, புதிய கிஸ்வாவை (2025) வெளியிட்டுள்ளது. இதில் கைத்தையலிட்ட 47 பட்டு துணி துண்டுகள் , தங்கம் மற்றும் வெள்ளித் தையல் நூல்களில் 68 குர்ஆன் வசனங்கள் இடம் பெற்றுள்ளது, 

இது 825 கிலோ கிராம் தூய  பட்டுத்துணியில் 120 கிலோ கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கம்பிகளையும் 60 கிலோ கிராம் தூய வெள்ளி கம்பிகளையும் கொண்டதாக காணப்படுவதுடன் 410 கிலோ கிராம் எடையுள்ள உள் பருத்தியும் இத்துணியில் காணப்படுகின்றது. இதன் மொத்த எடை 1,400 கிலோகிராம்.

video source Inside the Haramain 

புனித கஃபா கிஸ்வா தயாரிப்பு   கிங் அப்துல்அஸீஸ் வளாகம்

கிங் அப்துல்அஸீஸ் வளாகம் பற்றிய அறிமுகம்

மக்காவின் ஒம் அல்-ஜூத்(Om Al-Joud) மாவட்டத்தில் அமைந்துள்ள கிங் அப்துல்அஸீஸ் வளாகம் என்பது புனித கஅபாவின் கிஸ்வா (கறுப்பு பட்டுப் போர்வை) தயாரிக்க நியமிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற மையமாகும். இந்த கிஸ்வா,தங்கம் பூசப்பட்ட நூலால் புனித குர்ஆன் வசனங்கள் நெய்தப்பட்ட அழகிய பட்டுப் போர்வையாகும்.

1927-ஆம் ஆண்டு, மக்கா நகரத்தில் கிங் அப்துல்அஸீஸ் அல் சவூத் அவர்கள் கிஸ்வா தயாரிப்புக்கென முதல் சிறப்பு பட்டறையை நிறுவினார். பின்னர் 1977-இல் இன்றைய தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டு, இம்மரபை விரிவுபடுத்தியும் நவீனமயமாக்கியும் வந்தது. சல்மான் பின் அப்துல்அஸீஸ் அரசரின் ஆட்சியில், இந்தத் தொழிற்சாலை “கிங் அப்துல்அஸீஸ் வளாகம்” என மறுபெயரிடப்பட்டு, மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மஸ்ஜிதுன் நபவி பள்ளியின் பொது நிர்வாக அலுவலகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது.

பல தசாப்தங்களாக தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இந்த தொழிற்சாலை மின்னணு நெய்தல் இயந்திரங்கள் மற்றும் துல்லிய உபகரணங்களை பயன்படுத்தத் தொடங்கினாலும், அதன் புனித நோக்கை நிலைத்துவைத்துள்ளது.


வளாகத்தின் உள்ளே

இந்த வளாகத்திற்கு செல்லும் போது, இஸ்லாமிய உலகின்  மதிக்கத்தக்க சின்னமான கிஸ்வாவின் பின்னணி கைவினைப் பணியை நேரில் காணும் அரிய வாய்ப்பு கிடைக்கும். இங்கு 200-க்கும் மேற்பட்ட திறமையான கைவினைஞர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் இயந்திர மற்றும் கை நெய்தல், பட்டுப் நெய்தல், தங்க நூல் வேலைப்பாடு, அச்சிடல் மற்றும் இறுதி தொகுப்பு போன்ற பிரிவுகளில் பணியாற்றுகின்றனர்.புதிய கிஸ்வா தயாரிக்கும் மெத்தமான செயல்முறைகளை பார்வையாளர்கள் இங்கு நேரில் அறிந்து கொள்ளலாம்.


கிஸ்வா மாற்ற நிகழ்வு

பல நூற்றாண்டுகளாகவும்,துல்ஹிஜ்ஜா 9-ஆம் நாள், கிஸ்வா மாற்றும் வைபவம்  நடைபெற்று வந்தது. சமீப காலங்களில், பாதுகாப்பு மற்றும் இயக்க நெறிமுறைகளுக்கேற்ப, இந்த மரபு முஹர்ரம் மாதம் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

1447 ஆம் ஹிஜ்ரி ஆண்டுக்கான முஹர்ரம் மாத பிறை சவுதி அரேபியாவில் தென்பட்டதைத் தொடர்ந்து வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் கஃபாவுக்கான புதிய துணி மாற்ற நிகழ்வு நேற்றைய தினம் (2025/06/25) மக்கா மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கிஸ்வா  துணி நெய்தலில்  சவுதி அரேபியாவைச்சேர்ந்த 154 விசேட நிபுணர்கள் கலந்து கொண்டார்கள்.

 இது 825 கிலோ கிராம் தூய  பட்டுத்துணியில் 120 கிலோ கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கம்பிகளையும் 60 கிலோ கிராம் தூய வெள்ளி கம்பிகளையும் கொண்டதாக காணப்படுவதுடன் 410 கிலோ கிராம் எடையுள்ள உள் பருத்தியும் இத்துணியில் காணப்படுகின்றது.



No comments:

Post a Comment

Most viewed