Wednesday, 25 June 2025

மக்கொனையின் முத்து

 மக்கொனையின் முத்து.  

maggona jumma mosque









லை வீசும் கடலோடும்

சலசலத்தோடும் நதியோடும்

 அடையாளமாய் மக்கொனையூரின்

அழகாய் மிளிரும் பள்ளிவாசல்.

அங்கே ஐபத்து ஆண்டிற்கு மேலாக 

எங்கள் ஊரார் உளம் கவர்ந்து

அழகுற இறைபணி புரிகின்ற

ஆள் ஒருவர் பற்றி இயம்பிடுவேன்.


ரபீக் லெப்பை எனும் நாமத்துடன்

இனிய பண்புகளின் உறைவிடமாய் 

முஅத்தின் என்ற பணி சுமந்து

முகமலர்ந்தே தினம் தோன்றுகிறார். 


இறையில்லம் தனில் சிறப்பாக

கறையில்லா மனதுடன் பணிவாக

எல்லோருடனும் மிக அன்பாக

நல்லார் அவர் வாழ்வு நகர்கிறது


அதிகம் பேசிட கண்டதில்லை

அலுவல்கள் தவறிடக் கேட்டதில்லை

தனது இருப்பின் அடையாளம்

பண்பால் உணர்த்திடும் அருமனிதர்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே

நல்லார் ரபீக் லெப்பையவர்க்கு

எல்லா நலமும் அளிப்பாயே

நல்லாயுள் நீளச் செய்வாயே


நல்லார் அவரின் நிலை எழுதிட

உள்ளம்  நெடுநாள் ஏங்கியது

கவியாய் தொடுத்தே முடித்து விட்டேன்

கனிவாய்ப் பிரார்த்தனை  செய்கின்றேன்

     -மக்கொனையூராள்-

          25/06/2025

No comments:

Post a Comment

Most viewed