Saturday, 28 June 2025

முஹர்ரம் மாதமும், ஆஷூரா நோன்பும்

ல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தை நாம் அடைந்துள்ளோம். முஹர்ரம் மாதம் வந்து விட்டால் குறிப்பாக இம்மாதத்தில் மூன்று நிகழ்வுகளைப் பற்றி அதிகமாக பேசப்படுவதையும் அதை காரணமாக்கி சில காரியங்கள் அரங்கேற்றப்படுவதையும் நாம் அறிவோம். எனவே முஹர்ரம் மாதத்தில் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய சுன்னாக்களைப் பற்றிய ஒரு தெளிவை இந்த ஆக்கத்தினூடாக வழங்குவது பயனளிக்கும் என நினைக்கிறேன்.


1 ) மாதங்களைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான்:


إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ


வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.


ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ


இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள். இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! 53


திருக்குர்ஆன் 9:36

Thursday, 26 June 2025

புனித கஃபாவின் கிஸ்வா மாற்றும் நிகழ்வு


ஹி
ஜ்ரி 1447(2025) ஆண்டு புனித கஃபாவின் கிஸ்வா துணி மாற்றும் வைபவம் முஹர்ரம் முதலாம் நாள் நேற்று இரவு நடைபெற்றது.

 11 மாதங்கள் நீண்ட நுட்பமான பணிக்குப் பிறகு, புதிய கிஸ்வாவை (2025) வெளியிட்டுள்ளது. இதில் கைத்தையலிட்ட 47 பட்டு துணி துண்டுகள் , தங்கம் மற்றும் வெள்ளித் தையல் நூல்களில் 68 குர்ஆன் வசனங்கள் இடம் பெற்றுள்ளது, 

இது 825 கிலோ கிராம் தூய  பட்டுத்துணியில் 120 கிலோ கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட கம்பிகளையும் 60 கிலோ கிராம் தூய வெள்ளி கம்பிகளையும் கொண்டதாக காணப்படுவதுடன் 410 கிலோ கிராம் எடையுள்ள உள் பருத்தியும் இத்துணியில் காணப்படுகின்றது. இதன் மொத்த எடை 1,400 கிலோகிராம்.

video source Inside the Haramain 

Wednesday, 25 June 2025

மக்கொனையின் முத்து

 மக்கொனையின் முத்து.  

maggona jumma mosque









லை வீசும் கடலோடும்

சலசலத்தோடும் நதியோடும்

 அடையாளமாய் மக்கொனையூரின்

அழகாய் மிளிரும் பள்ளிவாசல்.

அங்கே ஐபத்து ஆண்டிற்கு மேலாக 

எங்கள் ஊரார் உளம் கவர்ந்து

அழகுற இறைபணி புரிகின்ற

ஆள் ஒருவர் பற்றி இயம்பிடுவேன்.


ரபீக் லெப்பை எனும் நாமத்துடன்

இனிய பண்புகளின் உறைவிடமாய் 

முஅத்தின் என்ற பணி சுமந்து

முகமலர்ந்தே தினம் தோன்றுகிறார். 


இறையில்லம் தனில் சிறப்பாக

கறையில்லா மனதுடன் பணிவாக

எல்லோருடனும் மிக அன்பாக

நல்லார் அவர் வாழ்வு நகர்கிறது


அதிகம் பேசிட கண்டதில்லை

அலுவல்கள் தவறிடக் கேட்டதில்லை

தனது இருப்பின் அடையாளம்

பண்பால் உணர்த்திடும் அருமனிதர்.


எல்லாம் வல்ல அல்லாஹ்வே

நல்லார் ரபீக் லெப்பையவர்க்கு

எல்லா நலமும் அளிப்பாயே

நல்லாயுள் நீளச் செய்வாயே


நல்லார் அவரின் நிலை எழுதிட

உள்ளம்  நெடுநாள் ஏங்கியது

கவியாய் தொடுத்தே முடித்து விட்டேன்

கனிவாய்ப் பிரார்த்தனை  செய்கின்றேன்

     -மக்கொனையூராள்-

          25/06/2025

Tuesday, 24 June 2025

The new Kiswa of Kaaba.

The annual Kiswah replacement ceremony will take place on Wednesday, 25 June 2025 after Isha prayers..

إن شاء الله



• Took 11 months to manufacture.

‎• Consist of 47 silk pieces embroidered with 68 verses. 

‎• Kiswah weight 1415 kg

‎• Undergoes thorough inspection at every stage within the King Abdulaziz Complex.

Source:Inside the Haramain

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்

 அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியன. அவனுடைய தூதர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தார், தோழர்கள் மீது ஸலாதும், ஸலாமும் நிலவுக!

நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.)
இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்)
ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன்
உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208)

இவை அல்லாஹ்வின் சட்ட வரம்புகளாகும். எவர்கள் அல்லாஹ்வுக்கும்,
அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்களை
அல்லாஹ் சொர்க்கங்களில் சேர்க்கிறான். அவற்றில் நீரருவிகள்
தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் (என்றென்றும்)
தங்கிவிடுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் 4:13)

முஹர்ரம்: இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் இது. அத்துடன், அல்லாஹ்
புனிதமாதமாக்கிய சிறப்புற்ற நான்கு மாதங்களில் ஒரு மாதமாகும்

அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை ஓர் ஆண்டுக்கு
பன்னிரெண்டுதான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த
நாளில் அல்லாஹ்வின் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு
மாதங்கள் சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கம் ஆகும். ஆகவே,
இவற்றில் நீங்கள் உங்களுக்கு தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம்.
(அல்குர்ஆன் 9:36)

Most viewed