Tuesday, 30 September 2025

Global Sumud Flotilla – காசாவுக்கு மனிதாபிமான குரல்

 



அறிமுகம்

உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் ஒன்றிணைந்து காசா மக்களுக்கு உதவி செய்வதற்காக முன்னெடுக்கப்படும் கடல் பயணமே Global Sumud Flotilla (GSF). “Sumud” என்ற அரபு சொல்லின் பொருள் உறுதி, நிலைத்தன்மை, மனவலிமை. இந்த மனவலிமையோடு தான் பல நாடுகளை சேர்ந்த மக்கள் காசா நோக்கி கடலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

நோக்கம்


காசா மக்களுக்கு நேரடியாக மனிதாபிமான உதவிகளை (உணவு, மருந்து, அவசரப் பொருட்கள்) கொண்டு செல்வது.


இஸ்ரேல் விதித்துள்ள கடற்படை முற்றுகையை சவாலுக்கு உட்படுத்துவது.


உலகளாவிய சமூகத்தில் “காசா மக்களுக்கு சுதந்திரம் வேண்டும்” என்ற ஒற்றுமையை வெளிப்படுத்துவது.

யார் பங்கேற்கிறார்கள்?


40க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள், கடற்படை நிபுணர்கள் உள்ளிட்ட பலரும்.


குறிப்பிடத்தக்கவாறு, சுவீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg உட்பட பல முக்கியமான முகங்கள் இணைந்துள்ளனர்.


பல நாடுகள் தங்களது குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆதரவை அரசாங்க மட்டத்திலும் வெளிப்படுத்தியுள்ளன.

சமீபத்திய நிலவரம் (அக்டோபர் 2025)


கப்பல்கள் ஸ்பெயின், இத்தாலி, துனிசியா போன்ற துறைமுகங்களில் இருந்து புறப்பட்டுள்ளன.

Monday, 15 September 2025

மக்கொனைப் பிரபல மாணிக்கக்கல் வர்த்தகரும் சமூகத் தலைவருமான ஏ.எஸ்.எம். பவ்ஸி ஹாஜியார் காலமானார்.

 



களுத்துறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த ஏ.எஸ்.எம். பவ்ஸி ஹாஜியார் (78) அவர்கள் நேற்று (14) மக்கொனை இந்திரிலிகொடை இல்லத்தில் காலமானார்.

பவ்ஸி ஹாஜியார், களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவராகவும், மாணிக்கக்கல் வர்த்தகத்தில் பிரபலமானவரும், சமாதான நீதிவானாகவும் விளங்கினார்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பேருவளை மற்றும் களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, சமயம், சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைத்தார்.

முக்கிய பங்களிப்புகள்

களுத்துறை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தில் பல்வேறு பதவிகள் வகித்து, பின்னர் தலைவராக பொறுப்பேற்றார்.


அலவியத்துல் காதிரிய்யா தரீக்காவின் மூத்த இஃவான்களில் ஒருவராக ஆன்மீக சேவையாற்றினார்.


மக்கொனை இந்திரிலிகொடையில் அஷ்ஷெய்க் ஹம்ஸா ஆலிம் அவர்களின் நினைவாக வீடமைப்புக் கிராமம் ஒன்றை உருவாக்க பங்களித்தார்.


சிங்கள – முஸ்லிம் இன ஒற்றுமைக்காக ஆக பாடுபட்டார்.


அரசியல் மற்றும் சமூக நெருக்கம்

மர்ஹூம் பவ்ஸி ஹாஜியார், முன்னாள் சபாநாயகர் மர்ஹூம் எம்.ஏ. பாக்கீர் மாக்கார் மற்றும் முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

அவரது பங்களிப்பால் களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுக்கு பல்வேறு சேவைகள் கிடைத்தன.

அவரது மறைவு குறித்து முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்.

“மர்ஹூம் பவ்ஸி ஹாஜியார் தனது வாழ்நாள் முழுவதும் சமூக சேவையிலும், முஸ்லிம் சமூக முன்னேற்றத்திலும் அர்ப்பணித்திருந்தார். மக்கொனை இந்திரிலிகொடையில் அஷ்ஷெய்க் ஹம்ஸா ஆலிம் அவர்களின் நினைவாக வீடமைப்புக் கிராமம் ஒன்றை உருவாக்க பங்களித்தார்.எனது தந்தையினதும் எனது அரசியல் வெற்றிக்காகவும் அவர் செய்த உழைப்பு மறக்க முடியாதது. அவரது மறைவு களுத்துறை மாவட்டத்திற்கே ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பாகும்” மேலும் இரத்தினக்கல் வர்தகரான அவர் இரத்தினக்கல் வர்த்தகத்தில்  நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக இருந்தார். மாணிக்கக்கல் துறையில் நீதியான வியாபாரியாக திகழ்ந்த அவர் அதன் மூலம் புகழ் பெற்றவராக விளங்கினார் எனக் குறிப்பிட்டார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (15) திங்கட்கிழமை ளுஹர் தொழுகைக்குப் பின் மக்கொனை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் பவ்ஸி ஹாஜியாரின் பாவங்களை மன்னித்து, அவர் ஆற்றிய சமூக சேவைகளை அங்கீகரித்து, ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை அருளுவானாக. ஆமீன்.


நன்றி .

தினகரன்

 உதயன்


Sunday, 14 September 2025

⚡ வீடுகளில் மின்சார பாதுகாப்பு – RCD & MCB அவசியம் ⚡

 

இன்றைய காலத்தில் மின்சார பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மின்சார விபத்துகளும் அதிகரித்துள்ளன. மனித உயிரையும், வீட்டையும் பாதுகாக்க RCD (Residual Current Device) மற்றும் MCB (Miniature Circuit Breaker) மிக முக்கியமானவை.

🔹 MCB என்றால் என்ன?

MCB (Miniature Circuit Breaker) என்பது,மின்சாரத்தில் Overload (அதிக சுமை) அல்லது Short-Circuit (கம்பி குறுக்கு இணைப்பு) ஏற்பட்டால் உடனே trip ஆகி,

கம்பிகள் எரிவது, தீ விபத்து ஏற்படுவது ஆகியவற்றை தடுக்கும்.

👉 உதாரணம்:

C10 (10A) → Lights & Fan க்கு.

C16 (16A) → Plug points, Power sockets க்கு.

🔹 RCD என்றால் என்ன?

RCD (Residual Current Device) அல்லது RCCB (Residual Current Circuit Breaker) என்பது,

மின்சாரத்தில் Earth Leakage (தரை வழியாக வெளியேறும் மின்னோட்டம்) ஏற்பட்டால்,

30mA அளவிலேயே trip ஆகி மனிதனை மின்சாரம் தாக்குதல் ஆகிய அபாயத்திலிருந்து காப்பாற்றும்.

👉 இதனால் மின்சார தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்பு பெருமளவில் தடுக்கப்படும்.

ஏன் இரண்டும் அவசியம்?

MCB மட்டும் இருந்தால் → Overload & Short Circuit பாதுகாப்பு கிடைக்கும், ஆனால் மின்சாரம் தாக்குதல் தடுப்பதில்லை.

RCD மட்டும் இருந்தால் → மின்சாரம் தாக்குதல் தடுக்கும், ஆனால் Overload & Short Circuit க்கு பாதுகாப்பு கிடையாது.

MCB + RCD இரண்டும் இருந்தால் → முழுமையான பாதுகாப்பு. 

👉 உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் இன்னும் RCD / RCCB பொருத்தப்படவில்லையெனில், உடனே பொருத்துங்கள்.

👉 மின்சார பாதுகாப்பை அலட்சியம் செய்யாதீர்கள்.

👉 சிறிய முதலீட்டால் பெரிய விபத்துகளைத் தவிர்க்கலாம்.

📌 வீட்டில் MCB + RCD இருந்தால் தான் நீங்கள், உங்கள் குடும்பம், உங்கள் வீடு – எல்லாம் முழுமையாக மின்சார விபத்துகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்.


Friday, 5 September 2025

செப்டம்பர் 07ஆம் தேதி அரிய முழு சந்திர கிரகணம்






2025 செப்டம்பர் 07ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இந்த கிரகணம் இலங்கையுடன் உலகின் பல நாடுகளிலும் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கும் என கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவுத் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன அவர்கள் தெரிவித்தார்.

கிரகணத்தின் நேரம்

தொடக்கம்: செப்டம்பர் 07 இரவு 8.58

முடிவு: செப்டம்பர் 08 அதிகாலை 2.25

மொத்த காலம்: 5 மணி 27 நிமிடங்கள்

முழு சந்திர கிரகணம் காணும் நேரம்

தொடக்கம்: செப்டம்பர் 07 இரவு 11.01

முடிவு: செப்டம்பர் 08 அதிகாலை 12.22

மொத்த காலம்: 1 மணி 22 நிமிடங்கள்

சூரியன் மற்றும் சந்திரன் இடையில் பூமி வருவதால், சந்திரன் பூமியின் கரும் நிழலுக்குள் செல்கிறது. இதனால் சந்திரன் முழுமையாக இருண்டு காணப்படும். இந்த அபூர்வமான காட்சி அரிதாகவே நிகழ்கிறது. 

இந்த சந்திர கிரகணம் முழுமையாகவோ அல்லது பகுதியளவோ உலக மக்கள் தொகையில் சுமார் 85% பேருக்கு தென்படும்.

இலங்கையர்களுக்கு அடுத்த முறையாக இத்தகைய முழு சந்திர கிரகணம் 2028 ஆம் ஆண்டுக்குப் பிறகே காணக் கிடைக்கும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

Most viewed